விஜய் டிவியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி வழக்கம்போல் இந்த முறையும் ரசிகர்களின் பேராதரவோடு முதல் வாரத்தை கடந்துள்ளது.18 போட்டியாளர்களுடன் பிரம்மாண்டமாக தொடங்கிய பிக்பாஸில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நமிதா மாரிமுத்து முதல் வாரத்திலேயே வெளியேறியது பலரையும் ஏமாற்றத்திற்குள்ளாக்கியது.

பிக் பாஸ் வீட்டின் முதல் கேப்டன் தேர்வு 2-வது வாரத்தின் முதல் நாளில் நடைபெற்றது. இதில் தாமரைச்செல்வி பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து நாமினேஷன் ப்ராசஸ் நடைபெற்றது. இதில் தாமரைச்செல்வி மற்றும் பாவனியைத் தவிர மற்ற போட்டியாளர்கள் அனைவரும் எவிக்ஷன் பிராசஸுக்கு தேர்வானவர்கள்.

முதல்வாரத்தில் தொடங்கப்பட்ட ஒரு கதை சொல்லட்டா டாஸ்க் 2-வது வாரத்திலும் தொடர்கிறது. அந்த வகையில் இன்றைய நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோக்கள் வெளியானது. முன்னதாக தாமரைச்செல்வி மகனைப் பிரிந்து வாடும் வலியை கண்ணீருடன் பகிர, மற்ற போட்டியாளர்களும் கண்கலங்கினர். 

தொடர்ந்து வெளியான 2-வது ப்ரோமோ வீடியோவில் அபிஷேக் ராஜா தனது கடந்து வந்த பாதையை பற்றி பகிர்ந்து கொள்கிறார். “எவனையும் ஏமாற்றி சம்பாதிக்கல” என அபிஷேக் ராஜா ஆவேசமாக பேச, மறுபுறம் ராஜுவும் இமான் அண்ணாச்சியும் அதுகுறித்து விமர்சிக்கிறார்கள். அந்த ப்ரோமோ வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.