ரசிகர்களின் பேராதரவோடு இரண்டு வாரங்களை கடந்து வெற்றிகரமாக நகர்கிறது பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி. முன்னதாக முதல் வாரத்தின் முடிவில் சற்றும் எதிர்பாராத விதமாக நமீதா மாரிமுத்து தவிர்க்க முடியாத காரணங்களால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது பலருக்கும் ஏமாற்றத்தை அளித்தது.

இதனையடுத்து 2-வது வாரத்தின் தொடக்கத்தில் நடைபெற்ற முதல் நாமினேஷன் பிராசஸில் பாவனி மற்றும் தாமரைச்செல்வி ஆகிய இருவரைத் தவிர மற்ற அனைத்து போட்டியாளர்களும் எவிக்சனுக்கு தேர்வானார்கள். நாமினேட் செய்யப்பட்ட 15 போட்டியாளர்களுக்கும் மக்கள் வாக்களித்து பிக்பாஸ் வீட்டின் முதல் எலிமினேஷன் யார் என்பதை தீர்மானித்தனர்.

நேற்று (அக்டோபர் 17) பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகினார். அதில் மக்களின் வாக்குகள் அடிப்படையில் இந்த வார முதல் எலிமினேஷனாக நாடியா சாங் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் இன்றைய (அக்டோபர் 18) நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வீடியோ வெளியானது.  

இதில் அக்ஷரா, பாவனி மற்றும் சின்னபொண்ணு ஆகியோர் அனேக போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்படுகிறார்கள். இன்னும் யாரெல்லாம் நாமினேட் செய்யப்படுவார்கள், பிக்பாஸ் 5-ல் அடுத்து வெளியேறப்போவது யார்? என தோன்றும் அனல்பறக்கும் நாமினேஷன் ப்ராசஸ் ப்ரோமோ வீடியோ வெளியானது. அந்த ப்ரோமோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.