முதல் வாரத்தை வெற்றிகரமாக கடந்துள்ளது விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி. தினமும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கும் சனி மற்றும் ஞாயிறுகளில் இரவு 9:30 மணிக்கும் விஜய் டிவி மற்றும் டிஸ்னி ப்லஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்திலும் ஒளிபரப்பாகிறது பிக் பாஸ் தமிழ் சீசன் 5.

கோலாகலமாக தொடங்கப்பட்ட பிக்பாஸில் முதல் வாரம் கலகலப்பும் நெகிழ வைக்கும் கதைகளும் என கடந்தது. குறிப்பாக “ஒரு கதை சொல்லட்டா” டாஸ்க் நடைபெற்றபோது போட்டியாளர்கள் அனைவரும் அவர்கள் கடந்து வந்த பாதையை உருக்கமாக பகிர்ந்து கொள்ள போட்டியாளர்களும் பார்வையாளர்களும் கண்கலங்கினர்.

இந்த முறை பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட, மக்களின் பேராதரவு பெற்ற நமீதா திடீரென உடல்நலக்குறைவு காரணமாக ஒரே வாரத்தில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து 2-வது வாரத்தின் முதல் நாளான இன்று பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் நாமினேஷன் ப்ராசஸ் தொடங்கியது.

இந்நிலையில் சற்று முன் இந்த வாரத்தின் Eviction-க்கு தேர்வானவர்கள் பட்டியல் வெளியானது. இதில் நாடியா சங்,நீருப் நந்தக்குமார்,இமான் அண்ணாச்சி,இசைவாணி, VJ பிரியங்கா, அபிநய், அபிஷேக் மற்றும் அக்ஷரா  ஆகிய 8 பேர் இந்த வார Eviction-க்கு தேர்வாகியுள்ளனர் என அறிவிக்கும் ப்ரோமோ வீடியோ வெளியானது. அந்த ப்ரோமோ வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.