விஜய் தொலைக்காட்சியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி, உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க, கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி தொடங்கி ஒரு வாரத்தை கடந்துள்ளது. முதல் வாரம் மிகவும் கலகலப்பாகவும் கண்ணீர் கதைகளோடும் நிறைவடைந்துள்ளது.

“ஒரு கதை சொல்லட்டா” டாஸ்க்-ல் போட்டியாளர்கள் அவர்கள் கடந்து வந்த பாதையை குறித்து பகிர்ந்து கொள்ள மற்ற போட்டியாளர்கள் நெகிழ்ந்தார். குறிப்பாக நமீதா மாரிமுத்து பகிர்ந்துகொண்ட, அவரது மிகக் கொடுமையான கடினமான கடந்து வந்த பாதை பிக் பாஸ் போட்டியாளர்கள் மட்டுமல்லாது பார்வையாளர்களையும் கண்கலங்க வைத்தது.

மேலும் சில தவிர்க்க முடியாத மருத்துவ காரணங்களுக்காக நமிதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது. பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் முக்கியமான போட்டியாளராக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நமிதா முதல் வாரத்திலேயே வெளியேறியது பலருக்கும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்றைய (அக்டோபர் 11) பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் முதல் நாமினேஷன் ஆரம்பமானது. “நல்லவங்க வேஷம் போடாதீங்க” என பிக்பாஸ் நாமினேஷன் ப்ராசஸ்-ஐ தொடங்கி வைக்க, ஒவ்வொரு போட்டியாளர்களும் ஒவ்வொருவரை நாமினேட் செய்து, அதற்கான காரணங்களை விளக்கும் புதிய ப்ரோமோ வெளியானது. அந்த ப்ரோமோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.