கோலாகலமாக தொடங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் இந்தமுறை 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.  இந்த வாரம் முதல் நாளில் பிக் பாஸ் வீட்டில்  சமையல், பாத்ரூம் சுத்தம் செய்தல், பாத்திரம் கழுவுதல், வீட்டை சுத்தம் செய்தல் உள்ளிட்ட அணிகளுக்கான கேப்டன் தேர்வு மற்றும் பேய் கதை என கலகலப்பாக சென்றது.

இதனையடுத்து நேற்றைய பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் கடந்துவந்த பாதை சுற்று ஆரம்பமானது. இதில் பாடகி இசைவாணி மற்றும் பாடகி சின்னப்பொண்ணு தங்கள் வாழ்வில் கடந்து வந்த கடினமான பாதையை பற்றி பகிர்ந்து கொள்ள மற்ற போட்டியாளர்கள் அனைவரும் கண்கலங்கினர்.

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் 2-வது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியானது. இன்றும் கடந்து வந்த பாதை சுற்று தொடர்கிறது. முன்னதாக வெளிவந்த ப்ரோமோவில் இமான் அண்ணாச்சி, தனக்கே உரித்தான பாணியில் அவர் கடந்து வந்த பாதை பற்றி பேச  ஹவுஸ்மேட்ஸ்ளுக்கு மத்தியில் மாற்றுக்கருத்துக்கள் ஏற்பட்டு காரசார விவாதம் என சலசலப்பு ஆரம்பித்தது.

தொடர்ந்து தற்போது வெளியான 2-வது ப்ரோமோ வீடியோவில் சுருதி ஜெயதேவன், பாடகி இசைவாணி மற்றும் ஐக்கி பெர்ரி ஆகிய மூவரும் பேசிக்கொண்டிருக்க, சுருதி கண் கலங்கியபடி, "நம்ம கலர வெச்சு டாமினேட் பண்ணுவாங்க" என தன்னுடைய வாழ்வில் தன்னுடைய நிறத்தின் பெயரில் அவதிக்கப்பட்டது குறித்து எமோஷனலாக பகிர்ந்துகொள்கிறார். இந்த ப்ரோமோ வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.