ரொம்ப ஓவரா இருக்கு உக்காரு ! லோகேஷை கலாய்த்த தளபதி
By Sakthi Priyan | Galatta | March 17, 2020 11:13 AM IST

XB நிறுவனம் தயாரிப்பில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஏப்ரல் மாதம் 9-ம் தேதி வெளியாகும் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. மாளவிகா மோகனன், ஸ்ரீமன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீநாத், நாகேந்திர பிரசாத், ரமேஷ் திலக் ஆகியோர் நடித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
நேற்று முன் தினம் மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிக சிறப்பாக நடைபெற்றது. வழக்கம் போல தளபதியின் மேடை பேச்சு அரங்கத்தை அதிர வைத்தது. பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் விஜய் சேதுபதியும் பேசி விழாவிற்கு கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தினார்.
அப்போது தளபதி பேசுகையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பற்றி அதிகம் பகிர்ந்துகொண்டார். சீன் பேப்பர் இல்லாமல் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பாராம். இதுபேன்ற இயக்குனருடன் எப்படி ஐந்து ஆறு மாதங்களுக்கு பணிபுரிய போகிறேன் என்று மன உளைச்சலுக்கு உள்ளாகியதாக சிரித்தபடி கூறினார். ஹார்ட் ஒர்க்கும் ஸ்மார்ட் ஒர்க்கும் இருந்தால் யார் வேண்டுமானாலும் முன்னேறலாம் என்பதற்கு லோகேஷ் ஓர் சிறந்த எடுத்துக்காட்டு என்று கூறினார். இதற்கு அமர்ந்திருந்த லோகேஷ் எழுந்து நின்று நன்றி தெரிவித்தார். மேடையில் இருந்த தளபதி, ரொம்ப ஓவரா இருக்கு உக்காரு என கிண்டலடித்தார்.
Coronavirus awareness video from RRR movie's Ram Charan and Jr. NTR
17/03/2020 11:14 AM
Full Video: Bhankas | Baaghi 3 | Tiger Shroff, Shraddha Kapoor
16/03/2020 08:10 PM