மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தற்போது தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி இருக்கிறார்.இதனை தொடர்ந்து யாதும் ஊரே யாவரும் கேளிர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

Vijay Sethupathi Visits Naanum Rowdy Thaan Lokesh

படங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல் அவ்வப்போது தன்னால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்து வருகிறார்.நானும் ரௌடி தான் படத்தில் தன்னுடன் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்த லோகேஷ் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

Vijay Sethupathi Visits Naanum Rowdy Thaan Lokesh

இந்த செய்தி அறிந்த விஜய்சேதுபதி உடனடியாக அவரை மருத்துவமனையில் சந்தித்து தன்னால் முடிந்த உதவியை அந்த குடும்பத்திற்கு செய்துவிட்டு லோகேஷ் விரைவில் குணமடைவர் என்று ஆறுதல் தெரிவித்தார்.இந்த புகைப்படங்களும்,வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.