மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்து அசத்தலான திரைப்படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. தமிழ் மட்டுமல்லாது தற்போது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

மலையாளத்தில் 19(1)(a) கிண்டியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்தின் ரீமேக்காக தயாராகும் மும்பை கார் மற்றும் அவுணர் திரைப்படமான காந்தி டாக்ஸ், தமிழில் எஸ் பி ஜனநாதன் இயக்கத்தில் லாபம் சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் மணிகண்டன் இயக்கத்தில் கடைசி விவசாயி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதிய திரைப்படம் என நீள்கிறது விஜய் சேதுபதியின் அடுத்தடுத்த படங்களின் பட்டியல்.

அடுத்ததாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் துக்ளக் தர்பார். இத்திரைப்படத்தில் நடிகர் பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ராஷி கண்ணா மஞ்சிமா மோகன் காயத்ரி கருணாகரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்

இந்நிலையில் விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் படத்தின் ருசிகர தகவல் வெளியானது. இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கத்தில் தயாராகும் துக்ளக் தர்பார் திரைப்படத்திற்கு பிரபல இயக்குனர் பாலாஜி தரணிதரன் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதியுள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

செவன் க்ரீன் ஸ்டூடியோ சார்பில் தயாரிப்பாளர் S.S. லலித் குமார் தயாரிப்பில் உருவாக்கிய துக்ளக் தர்பார் படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதி வெளியானது. வருகிற ஆகஸ்ட் 18-ஆம் தேதி தர்பார் படத்தின் பாடல்கள் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது