இன்றைய காலகட்டத்தில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசால்டாக அதை நம் கண் முன் கொண்டுவந்து நிறுத்தும் வல்லமை படைத்த நடிகர்களில் ஒருவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.துணை நடிகராக தனது சினிமா பயணத்தை தொடங்கி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்து நிற்கிறார்.இவரது வளர்ச்சி பல நடிகர்களுக்கும் எடுத்துக்காட்டாக இருந்துள்ளது.

சோலோ ஹீரோவாக பல படங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதி.தனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் கிடைத்தால் வயதான கேரக்டராக இருந்தாலும் சரி மற்ற பெரிய நடிகர்களுடன் இணைந்து நடிக்கவும் தயங்குவதில்லை.அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் VJS 46 உள்ளிட்ட சில முக்கிய படங்களில் நடித்து வருகிறார்.இவரது லாபம்,துக்லக் தர்பார் உள்ளிட்ட படங்கள் விரைவில் வெளிவர உள்ளன.

இவர் நடித்துள்ள அனபெல் சேதுபதி படம் குறித்த சூப்பர் அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.விஜய்சேதுபதியுடன் இணைந்து டாப்ஸீ,ராதிகா சரத்குமார்,யோகிபாபு,தேவதர்ஷினி உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளனர்.passion ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை தீபக் சுந்தர்ராஜன் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.ஹாரர் காமெடி படமாக உருவாகியுள்ள இந்த படம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.படத்தினை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.