இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பாளர் கலைமகன் தயாரிப்பில் உருவாகும் இடிமுழக்கம் படத்தில் , இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகை காயத்ரி கதாநாயகியாக நடிக்கிறார்.

முதல்முறை இயக்குனர் சீனு ராமசாமியின் படத்தில் நடிக்கும் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷின் இடிமுழக்கம் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் N.R.ரகுநந்தன் இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். சமீபத்தில் தொடங்கப்பட்ட இடிமுழக்கம் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முன்னதாக இயக்குனர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் வெளிவந்த தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. தொடர்ந்து இயக்குனர் சீனு ராமசாமி உடன் இடம் பொருள் ஏவல், தர்மதுரை, மாமனிதன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இடிமுழக்கம் படப்பிடிப்பு தளத்திற்கு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வருகை புரிந்துள்ளார். விஜய் சேதுபதிக்கு மிகவும் நெருக்கமான இயக்குனர் சீனு ராமசாமியின் இடிமுழக்கம் படப்பிடிப்பில் சர்ப்ரைஸாக விசிட்டடித்த விஜய் சேதுபதியின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படங்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்.