மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்து வரிசையாக பல படங்கள் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகி வருகின்றன. மேலும் தற்போது வெப்சீரிஸிலும் களமிறங்கியுள்ள விஜய் சேதுபதி, ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் இயக்குனர்கள் இயக்கத்தில் உருவாகியுள்ள ஃபர்ஸி வெப் சீரிஸ் விரைவில் அமேசான் ப்ரைம் வீடியோவில் ரிலீஸாகவுள்ளது.

முன்னதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசனுடன் இணைந்து விஜய்சேதுபதி நடித்திருக்கும் விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3ஆம் தேதியும் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடித்துள்ள மாமனிதன் திரைப்படம் வருகிற ஜூன் 24-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

மேலும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் உடன் இணைந்து மேரி கிறிஸ்மஸ் எனும் ஹிந்தி படத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதி, காந்தி டாக்ஸ் எனும் மௌன படத்திலும் நடித்து வருகிறார். இந்த வரிசையில் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்கும் மைக்கேல் திரைப்படத்தில் விஜய் சேதுபதி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

மேலும் கௌதம் வாசுதேவ் மேனன், வரலஷ்மி சரத்குமார், திவ்யான்ஷா கௌஷிக், வருண் சந்தேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள மைக்கேல் திரைப்படத்திற்கு சாம்.C.S இசையமைக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் கர்ணன் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்து தயாரிக்க தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. 

இந்நிலையில் மைக்கேல் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மே 7-ஆம் தேதி காலை 10.08 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.