தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு சன் டிவியிலும் செப்டம்பர் 11-ஆம் தேதி மதியம் 12.00 மணிக்கு நெட்ஃபிலிக்ஸிலும் துக்ளக் தர்பார் திரைப்படம் ஒளிபரப்பாகிறது. தொடர்ந்து செப்டம்பர் 17ஆம் தேதி அனபெல் சேதுபதி திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருக்கும் லாபம் திரைப்படம் வருகிற செப்டம்பர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனின் கடைசி திரைப்படமாக அடுத்து வெளிவர இருக்கிறது லாபம்.

மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் எழுதி இயக்கிய லாபம் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை 7Cs என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர பி.ஆறுமுக குமாருடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

முன்னதாக வெளியான லாபம் படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில் தற்போது லாபம் திரைப்படத்தின் மொத்த பாடல்களும் அடங்கிய ஜுக்பாக்ஸ் வெளியானது. இசையமைப்பாளர் டி.இமான் இசையில் உருவாகியிருக்கும் மொத்த பாடல்களும் அடங்கிய  ஜூக்பாக்ஸ் வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.