மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்து மூன்று திரைப்படங்கள் ரசிகர்களை மகிழ்விக்க தயார் நிலையில் உள்ளது. முன்னதாக வருகிற செப்டம்பர் 10ஆம் தேதி முடியாத சன் டிவியில் துக்ளக் தர்பார் திரைப்படம் ஒளிபரப்பாகிறது தொடர்ந்து செப்டம்பர் 17ஆம் தேதி அனபெல் சேதுபதி திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. இந்த இரண்டு திரைப்படங்களுக்கு முன்பாக திரையரங்கில் நேரடியாக வெளியாகும் திரைப்படம் லாபம்.
.
தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனின் கடைசி திரைப்படமாக அடுத்து வெளிவர இருக்கிறது லாபம். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருக்கும் லாபம் திரைப்படம் வருகிற செப்டம்பர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் எழுதி இயக்கிய லாபம் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை 7Cs என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர பி.ஆறுமுக குமாருடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

முன்னதாக வெளிவந்த லாபம் திரைப்படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது லாபம் படத்தின் புதிய பாடல் வெளியானது. நடிகை ஸ்ருதிஹாசன் நடனமாடும் துள்ளலான க்ளாரா  மை நேம் இஸ் க்ளாரா எனும் பாடல் தற்போது வெளியாகி உள்ளது. அந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.