பல விதமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து, தனது யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி மக்களின் மனதில் இடம் பிடித்திருக்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்து தமிழில், காத்து வாக்குல ரெண்டு காதல்,விடுதலை,சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதிய படம் ஆகிய படங்கள் தயாராகின்றன. தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளின் திரைப்படங்களிலும் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.

முன்னதாக மலையாளத்தில் 19(1)(a) ,நிறைவடைந்து விரைவில் வெளிவர உள்ள நிலையில் பாலிவுட்டில் பிரபலமான ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் இயக்குனர்களுடன் இணைந்து புதிய ஹிந்தி வெப் சீரிஸிலும், அதிதி ராவ் ஹைதாரி உடன் காந்தி டாக்ஸ் எனும் மௌன படத்திலும் நடித்து வருகிறார். மேலும் மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கான மும்பைக்கர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக உலக நாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் விக்ரம் படத்திலும் நடித்து வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் நடிப்பில் கடந்த 8-ம் தேதி வெளியான திரைப்படம் முகிழ். மனதை வருடும் ஒரு மணிநேர திரைப்படமான முகிழ் படத்தில் முதல் முறையாக விஜய் சேதுபதியுடன் அவரது மகள் ஸ்ரீஜா விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ளார்.

முகிழ் படத்தை விஜய் சேதுபதி புரோடக்சன்ஸ் மற்றும் பாக்கெட் மனி பிலிம்ஸ் புரோடக்சன் இணைந்து வழங்க இயக்குனர் S.கார்த்திக் எழுதி இயக்கியுள்ளார். ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த படத்திலிருந்து மாயக்காரா பாடல் வீடியோ தற்போது வெளியானது. அழகான இந்த பாடல் வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.