தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனரான சிம்புதேவன் வாழ்க்கையின் யதார்த்தங்களையும் நிகழ்கால அரசியலையும் ஒருசேர கலந்து சாமானியர்களின் மனதில் பதியும் பாடங்களை படங்களாக கொடுப்பவர். கடைசியாக இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த புலி திரைப்படத்திற்கு பிறகு தற்போது அடுத்த படமாக கசட தபற திரைப்படம் வெளிவருகிறது.

கசட தபற திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான இயக்குனர் வெங்கட்பிரபு, நடிகர் சந்தீப் கிஷன், ஹரிஷ் கல்யாண், பிரேம்ஜி அமரன், சாந்தனு பாக்கியராஜ், ப்ரியா பவானி சங்கர், ரெஜினா கெஸன்ட்ரா, விஜயலட்சுமி, ஜனனி ஐயர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

ஆன்தாலஜி படமாக தயாராகும் கசட தபற திரைப்படத்தை பிளாக் டிக்கெட் கம்பெனி சார்பில் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.ரவீந்திரன் ஆகியோர் இணைந்து தயாரிக்க இயக்குனர் சிம்புதேவன் எழுதி இயக்குகிறார்.கசட தபற திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 27 ஆம் தேதி சோனி லைவ் தளத்தில் நேரடியாக வெளியாகிறது.

கசட தபற திரைப்படத்திற்கு முன்னணி ஒளிப்பதிவாளர்கள் விஜய்மில்டன் ,எம்.எஸ்.பிரபு ,பாலசுப்ரமணியம் , எஸ்.ஆர்.கதிர், ஆர்.டி.ராஜசேகர் மற்றும் சக்தி சரவணன் உள்ளிட்டோர் ஒளிப்பதிவு செய்ய ,யுவன் ஷங்கர் ராஜா, ஷான் ரோல்டன், சந்தோஷ் நாராயணன்,சாம் சி எஸ்,ஜிப்ரான் மற்றும் பிரேம்ஜி அமரன் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது கசட தபற படத்தின் டீசர் வெளியானது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் கசட தபற திரைப்படத்தின் டீசரை வெளியிட்டார். ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்திருக்கும் கசட தபற படத்தின் டீசரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.