தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி தற்போது இந்திய அளவில் மக்களின் மனம் கவர்ந்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதியாக தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகை அதிதி ராவ் ஹைதாரி உடன் இணைந்து காந்தி டாக்ஸ் எனும் மௌன திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

மேலும் தமிழில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான மாநகரம் திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்காக தயாராகும் மும்பை கார் திரைப்படத்தில் தமிழில் நடிகர் முனிஸ்காந்த் நடித்த கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி இந்தியில் நடிக்கிறார். தொடர்ந்து மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் விக்ரம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் அனபெல் சேதுபதி திரைப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் வருகிற செப்டம்பர் 17ஆம் தேதி வெளியாகிறது . முன்னதாக விஜய் சேதுபதி பார்த்திபன் இணைந்து நடித்திருக்கும் துக்ளக் தர்பார் திரைப்படம் வருகிற செப்டம்பர் 10ஆம் தேதி சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பாகிறது தொடர்ந்து நெட்ஃபிலிக்ஸிலும் வெளியாகிறது.

இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந் வசந்தா இசையமைத்துள்ளார். தற்போது துக்ளக் தர்பார் திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி வெளியானது. தர்பார் படத்தின் டிரைலர் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.