மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்து அசத்தலான திரைப்படங்கள் வரிசை கட்டி வருகின்றன. முன்னதாக மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள லாபம் திரைப்படம் வருகிற செப்டம்பர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையடுத்து விஜய் சேதுபதியும் நடிகை டாப்ஸியும் இணைந்து நடித்திருக்கும் அனபெல் சேதுபதி திரைப்படம் வருகிற செப்டம்பர் 17ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது. 

தமிழ் மட்டுமல்லாது தற்போது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. அடுத்ததாக விஜய் சேதுபதியின் நடிப்பில் அரசியல்  திரைப்படமாக வெளிவருகிறது துக்ளக் தர்பார். இத்திரைப்படத்தில் நடிகர்கள் பார்த்திபன் & சத்தியராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், காயத்ரி, கருணாகரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்

செவன் க்ரீன் ஸ்டூடியோ சார்பில் தயாரிப்பாளர் S.S. லலித் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள துக்ளக் தர்பார் படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்களை இயக்குனர் பாலாஜி தரணிதரன் எழுதியுள்ளார். இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கத்தில் தயாராகும் துக்ளக் தர்பார் திரைப்படத்திற்கு  மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் நேரடியாக சன் டிவியில் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு வெளியாகிறது. தொடர்ந்து செப்டம்பர் 11-ம் தேதி மதியம் 12 மணிக்கு நெட்ஃபிலிக்ஸிலும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் துக்ளக் தர்பார் படத்தின் தரமான ஸீனீக் பீக் வீடியோ ஒன்று தற்போது வெளியானது. ட்ரண்டாகும் அந்த வீடியோவை கீழே உள்ள லிங்கை கண்டு மகிழுங்கள்.