இந்திய திரையுலகின் குறிப்பிடப்படும் சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் தமிழ் திரை உலகின் இன்றியமையாத நடிகராகவும் படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் நடிப்பில் கடைசியாக ரிலீஸான திரைப்படம் கடைசி விவசாயி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றதோடு பலரது பாராட்டுக்களைப் பெற்றது

தொடர்ந்து  இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து விக்ரம், இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் VJS46, காந்தி டாக்ஸ் எனும் மௌன திரைப்படம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாகவும் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார்.

இந்த திரைப்படங்கள் அனைத்தும் விரைவில் ரிலீசாக தயாராகி வரும் நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் திரைப்படமும் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. YSR  புரோடக்சன் சார்பில் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ள மாமனிதன் படத்திற்கு இசைஞானி இளையராஜா , யுவன் ஷங்கர் ராஜா மற்றும் கார்த்திக் ராஜா இணைந்து இசையமைத்துள்ள 

எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ள மாமனிதன் படத்தில் கதாநாயகியாக காயத்ரி நடிக்க, குரு சோமசுந்தரம், ஷாஜி சென், ஜுவல் மேரி, அனிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.மாமனிதன் படத்தின் தமிழக & கேரள ரிலீஸ் உரிமத்தை பிரபல நடிகரும் தர்மதுரை தயாரிப்பாளருமான R.K.சுரேஷின் ஸ்டுடியோ 9 நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் மாமனிதன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த முக்கிய அறிவிப்பை நடிகரும் தயாரிப்பாளருமான R.K.சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வருகிற மே மாதம் 6-ம் தேதி மாமனிதன் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என R.K.சுரேஷ் தெரிவித்துள்ள நிலையில் இது குறித்த இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.