இயற்கை, ஈ, பேராண்மை போன்ற சிறந்த படைப்புக்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லாபம். விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளனர். சமூக அக்கறை மிகுந்த கதையை பேசும் ஜனநாதனின் திரைமொழிக்கு தனி ரசிகர்கள் உண்டு. புறம்போக்கு படத்தில் விஜய் சேதுபதியை இயக்கிய ஜனநாதன், இரண்டாவது முறையாக லாபம் படத்தில் இயக்கி வருகிறார். 

ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாகவும், ஜகபதி பாபு, சாய் தன்ஷிகா, கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர். இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்திலிருந்து யாழா என்ற பாடலின் முன்னோட்டம் வெளியாகி அசத்தியது. ஸ்ருதி ஹாசன் பாடியிருந்த இந்த பாடல் வரிகளை யுகபாரதி எழுதியிருந்தார். 

இந்த படத்தின் டப்பிங் பணிகளை முடித்தனர் படக்குழுவினர். பாதுகாப்பான முறையில் ஸ்டுடியோவில் முகக்கவசம் அணிந்தபடி படக்குழுவினர் டப்பிங் பணிகளை செய்துள்ளனர். சமீபத்தில் படத்தின் ட்ரைலர் காட்சிகள் வெளியாகி ட்ரெண்டானது. இந்நிலையில் படத்தின் மீதம் உள்ள படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது. லாக்டவுனுக்கு பிறகு நடைபெறும் இந்த படப்பிடிப்பில் நடிகை ஸ்ருதிஹாசன் மற்றும் ஜகபதி பாபு கலந்து கொண்டனர். கடைசியாக தல அஜித் நடித்த விஸ்வாசம் படத்தில் நடித்திருந்தார் ஜகபதி பாபு. 

கமர்சியல் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தாலும், வில்லன் ரோல், வித்தியாசமான கதை, வித்தியாசமான கதாபாத்திரம் என தேர்ந்தெடுத்து நடிப்பதிலும் குறை வைக்காமல் அசத்தி வருகிறார் விஜய் சேதுபதி. இந்த லாக்டவுனில் இயக்குனர் நலன் குமாரசாமியுடன் குட்டி லவ் ஸ்டோரி ஆந்தாலஜி படத்தில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து டாப்ஸி நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்துள்ள விஜய் சேதுபதியின் நடிப்பை காண ஆவலாக உள்ளார் அவரது ரசிகர்கள். XB பிலிம்ஸ் தயாரித்த மாஸ்டர் படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளை துவங்கியுள்ளனர் படக்குழுவினர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. கொரோனா ஊரடங்கால் மாஸ்டர் ரிலீஸை தள்ளிப்போடும் நிலை உருவானது. இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார் விஜய்சேதுபதி. 

துக்ளக் தர்பார் படத்தின் பிரத்தியேக புகைப்படங்கள் வெளியானது. டெல்லி பிரசாத் தீனதயாளன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இது தவிர்த்து மணிகண்டன் இயக்கிய கடைசி விவசாயி, சீனு ராமசாமியின் மாமனிதன், விருமாண்டியின் க.பெ. ரணசிங்கம், வெங்கட கிருஷ்ணா ரோகந்தின் யாதும் ஊரே யாவரும் கேளிர், அல்லு அர்ஜூனுடன் புஷ்பா, அமீர்கானுடன் லால் சிங் சத்தா போன்ற படங்கள் விஜய் சேதுபதி கைவசம் உள்ளது.