இன்றைய காலகட்டத்தில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசால்டாக அதை நம் கண் முன் கொண்டுவந்து நிறுத்தும் வல்லமை படைத்த நடிகர்களில் ஒருவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.துணை நடிகராக தனது சினிமா பயணத்தை தொடங்கி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்து நிற்கிறார்.இவரது வளர்ச்சி பல நடிகர்களுக்கும் எடுத்துக்காட்டாக இருந்துள்ளது.

சோலோ ஹீரோவாக பல படங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதி.தனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் கிடைத்தால் வயதான கேரக்டராக இருந்தாலும் சரி மற்ற பெரிய நடிகர்களுடன் இணைந்து நடிக்கவும் தயங்குவதில்லை.அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் VJS 46,காத்துவாக்குல ரெண்டு காதல்,வெற்றிமாறனின் விடுதலை,மைக்கல் உள்ளிட்ட சில முக்கிய படங்களில் நடித்து வருகிறார்.

இவற்றை தவிர ஒரு ஹிந்தி வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார் விஜய்சேதுபதி,இவற்றை தவிர இன்னும் பல படங்களில் நடிப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.தற்போது விஜய்சேதுபதி நடிக்கும் ஹிந்தி படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.அந்தாதுண் பட இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தயாராகும் Merry Chirstmas படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

பிரபல பாலிவுட் நடிகை கத்ரினா கைப் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் இன்று மும்பையில் தொடங்கியுள்ளது.படம் குறித்த அடுத்தகட்ட அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஷூட்டிங் தொடங்கிய புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.