தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி தற்போது இந்திய சினிமாவின் இன்றியமையாத நடிகர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார்.  அந்தவகையில் மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கான மும்பைக்கர் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் இயக்குனர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய வெப்சீரிஸிலும் நடித்துள்ளார்.

முன்னதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வருகிற ஏப்ரல் 28ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாக உள்ள நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்துள்ள விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3-ம் தேதி ரிலீஸாகவுள்ளது.

தொடர்ந்து  இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் VJS46 ஆகிய படங்களும் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன. இந்த வரிசையில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் திரைப்படம் வருகிற மே 20-ம் தேதி ரிலீஸாகவுள்ளது. 

YSR  புரோடக்சன் சார்பில் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ள மாமனிதன் படத்திற்கு இசைஞானி இளையராஜா , யுவன் ஷங்கர் ராஜா மற்றும் கார்த்திக் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். மாமனிதன் படத்தில் காயத்ரி கதாநாயகியாக நடிக்க, குரு சோமசுந்தரம், ஷாஜி சென், ஜுவல் மேரி, அனிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இந்நிலையில் மாமனிதன் படத்திலிருந்து என்ன நடக்குது எனும் பாடல் தற்போது வெளியானது. இப்பாடலை நாட்டுப்புற பாடகரும் சூப்பர் சிங்கர் போட்டியாளருமான முத்துசிற்பி பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மாமனிதன் படத்தின் என்ன நடக்குது பாடல் இதோ…