முதல் முறையாக தமிழில் விஜய் சேதுபதியின் புதிய அட்டகாசமான ப்ராஜக்ட்... மீண்டும் இணையும் கடைசி விவசாயி கூட்டணி! சர்ப்ரைஸ் அறிவிப்பு இதோ

விஜய் சேதுபதியின் முதல் தமிழ் வெப் சீரிஸ் பூஜையுடன் தொடங்கியது,vijay sethupathi first tamil web series shoot starts with pooja | Galatta

மக்களின் மனம் கவர்ந்த நாயகராக தான் ஏற்று நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களின் வாயிலாகவும் தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை தொடர்ந்து நிரூபித்து வரும் நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. முன்னதாக கடந்த 2022ம் ஆண்டில் மட்டும் தமிழில் கடைசி விவசாயி காத்து வாக்குல ரெண்டு காதல் விக்ரம் மாமனிதன் DSP என 5 படங்களும் மலையாளத்தில் 19(1)(a) என்ற ஒரு படமும் சேர்த்து மொத்தம் ஆறு திரைப்படங்கள் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்து வெளிவந்து ரசிகர்களை மகிழ்வித்தன. இதையடுத்து நடிகர் சந்தீப் கிஷன் உடன் இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்த மைக்கேல் திரைப்படம் இந்த 2023 ஆம் ஆண்டில் கடந்த பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆனது. 

தொடரந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் விடுதலை. எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் துணைவன் சிறுகதையை மையப்படுத்தி தயாரிப்பாளர் எல்ரெட் குமார் அவர்களின் ஆர் எஸ் இன்போடைன்மென்ட் தயாரிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கும் விடுதலை திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. அந்த வகையில் விடுதலை பாகம் 1 இன்று மார்ச் 31 ஆம் தேதி உலகம் எங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. 

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த அட்டகாசமான திரைப்படங்களில் நடித்து வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, முதல் முறையாக இயக்குனரை அட்லி இயக்கத்தில் பாலிவுட்டில் ஷாருக் கான் நடிப்பில் தயாராகும் ஜவான் திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். மேலும் கத்ரீனா கைப் உடன் இணைந்து மேரி கிறிஸ்மஸ் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி காந்தி டாப்ஸ் எனும் மௌன படத்திலும், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் முதல் திரைப்படமான மாநகரம் திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்காக தயாராகும் மும்பைக்கர் திரைப்படத்திலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். திரைப்படங்கள் மட்டுமல்லது தற்போது வெப் சீரீஸிலும் களமிறங்கி இருக்கும் மக்கள் செல்வன் சமீபத்தில் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளிவந்த ஃபர்சி வெப் சீரிஸில் காவல்துறை அதிகாரியாக மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்தார்.

இந்த வரிசையில் அடுத்து தனது முதல் தமிழ் வெப் சீரிஸில் விஜய் சேதுபதி நடிக்கிறார். காக்கா முட்டை, ஆண்டவன் கட்டளை மற்றும் கடைசி விவசாயி உள்ளிட்ட தரமான படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் இயக்குனர் M.மணிகண்டன் இயக்கத்தில் உருவாகும் இந்த வெப் சீரிஸ் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது. 7Cs என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த புதிய வெப் சீரிஸுக்கு பிரேமம் படத்தின் இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று இந்த புதிய வெப் சீரீஸின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதர அறிவிப்புகள் விரைவில் அடுத்தடுத்து வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Happy to start my first web series in Tamil for @disneyplusHSTam, Directed by #MManikandan with an auspicious pooja!@7CsPvtPte @Aaru_Dir@shammysaga @RajeshMRadio @epitole @jacki_art @yogeshdir @Kavitha_Stylist pic.twitter.com/aa8GnzrDSp

— VijaySethupathi (@VijaySethuOffl) March 31, 2023

தயவுசெய்து COMPARE பண்ணாதீங்க... கைதி ரீமேக் போலா பட விமர்சனங்களுக்கு பதிலளித்த தயாரிப்பாளர் SRபிரபு! விவரம் உள்ளே
சினிமா

தயவுசெய்து COMPARE பண்ணாதீங்க... கைதி ரீமேக் போலா பட விமர்சனங்களுக்கு பதிலளித்த தயாரிப்பாளர் SRபிரபு! விவரம் உள்ளே

'பொன்னியின் செல்வன் மாதிரி 10 படங்கள் வந்தால் இந்த கேள்வி இருக்காது!'- நாவல் To சினிமா பற்றி ஜெயமோகனின் தரமான பதில்! வீடியோ உள்ளே
சினிமா

'பொன்னியின் செல்வன் மாதிரி 10 படங்கள் வந்தால் இந்த கேள்வி இருக்காது!'- நாவல் To சினிமா பற்றி ஜெயமோகனின் தரமான பதில்! வீடியோ உள்ளே

பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழாவிற்காக புது உச்சம் தொட்ட ARரஹ்மான்... பிரம்மிப்பூட்டும் அசத்தலான அறிவிப்பு இதோ!
சினிமா

பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழாவிற்காக புது உச்சம் தொட்ட ARரஹ்மான்... பிரம்மிப்பூட்டும் அசத்தலான அறிவிப்பு இதோ!