ரௌத்திரம், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா , ஜுங்கா, காஷ்மோரா போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் இயக்குனர் கோகுல். இந்த லாக்டவுனில் இவர் இயக்கத்தில் புதிதாக உருவாகவிருக்கும் படம் கொரோனா குமார். 

Vijay Sethupathi Corona Kumar Title Promo Gokul Vijay Sethupathi Corona Kumar Title Promo Gokul

கோகுல் இயக்கிய இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தின் பெயர் சுமார் மூஞ்சி குமார். அந்த கதாபாத்திரத்தின் தொடர்ச்சியாகவும் தற்போது நிலவும் சூழலையும் சேர்த்து புதிய படத்திற்கு கொரோனா குமார் என்று பெயர் வைத்திருக்கிறார். உலகம் முழுவதும் கொரோனா அதன் பாதிப்பை காட்டிக் கொண்டிருக்கும் நிலையில், கொரோனா குமார் என்று டைட்டில் வைத்து படத்திற்கான வேலைகளை துவங்கியுள்ளார் கோகுல்.

Vijay Sethupathi Corona Kumar Title Promo Gokul

இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இதன் ப்ரோமோ வெளியானது. இதனை பார்த்த ரசிகர்கள் ஹாப்பி அண்ணாச்சி என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.