மக்களின் மனம் கவர்ந்த கலைஞனான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதலில் சினிமாவில் அறிமுகமான போது பல திரைப்படங்களில் சிறு வேடங்களில் ஒரு சில காட்சிகளுக்கு மட்டுமே தோன்றும் நடிகனாக நடித்திருந்தார். ஆனால் இப்போது படிப்படியாக வளர்ந்து பல திரைப்படங்களில் நடித்து மக்கள் கொண்டாடும் மக்கள் செல்வனாக உயர்ந்திருக்கிறார்.

திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்களும் ரசிகர் பட்டாளங்கள் வைத்திருப்பது உண்டு. ஆனால் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சினிமா பிரபலம், கதாநாயகன், ஹீரோ போன்ற பிம்பங்களை உடைத்து சாதாரண மக்களின் யதார்த்தங்களில் கலந்து இதயத்தில் இடம் பிடித்தவர். 

கடைசியாக தமிழில் தளபதி விஜயுடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தில் நடித்த விஜய் சேதுபதி, தெலுங்கு சினிமாவிலும்  உப்பென்னா திரைப்படத்தில் மிரட்டல் வில்லனாக அசத்தியிருந்தார். இதனையடுத்து தற்போது உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் விக்ரம் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் முன்னணி தமிழ் தொலைக்காட்சி நிறுவனமான சன் டிவியில் மாஸ்டர் செஃப் என்னும் சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். உலக அளவில் பிரபலமான மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி தற்போது தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் தெலுங்கில் ஒளிபரப்பாகும் மாஸ்டர்ஸ் நிகழ்ச்சியை பிரபல நடிகை தமன்னா தொகுத்து வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த வாரம் சனி கிழமை முதல் சனி & ஞாயிறுகளில்  ஒளிபரப்பாக உள்ள இந்த புதிய மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் லேட்டஸ்ட் ப்ரோமோ வெளியாகி உள்ளது. கிளாஸ்ஸான லுக்கில் விஜய் சேதுபதி இருக்கும் இந்த ப்ரோமோ வீடியோ தற்போது ட்ரெண்டாகி வருகிறது.