இன்றைய காலகட்டத்தில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசால்டாக அதை நம் கண் முன் கொண்டுவந்து நிறுத்தும் வல்லமை படைத்த நடிகர்களில் ஒருவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.துணை நடிகராக தனது சினிமா பயணத்தை தொடங்கி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்து நிற்கிறார்.இவரது வளர்ச்சி பல நடிகர்களுக்கும் எடுத்துக்காட்டாக இருந்துள்ளது.

சோலோ ஹீரோவாக பல படங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதி.தனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் கிடைத்தால் வயதான கேரக்டராக இருந்தாலும் சரி மற்ற பெரிய நடிகர்களுடன் இணைந்து நடிக்கவும் தயங்குவதில்லை.சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்,மெகாஸ்டார் சிரஞ்சீவி,மாதவன்,கெளதம் கார்த்திக்,STR,அரவிந்த் சுவாமி,ஜெயராம் என்று பல பெரிய நடிகர்களுடன் போட்டி போட்டு நடித்துள்ளார் விஜய் சேதுபதி.சமீபத்தில் இவர் தளபதி விஜயுடன் இணைந்து நடித்த மாஸ்டர் படம் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது.

இதனை அடுத்து இவரது சில படங்கள் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தன.இவருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக வழங்கப்பட்டது.அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் VJS 46 படத்தில் நடித்து வருகிறார்.

இவர் வில்லனாக நடித்து பிப்ரவரி மாதம் தெலுங்கில் வெளியாகி சக்கைபோடு போட்ட படம் Uppena,இந்த படம் சில நாட்களுக்கு முன் Netflix தளத்தில் வெளியானது.தற்போது Netflix ட்விட்டர் பக்கத்தில் விஜய்சேதுபதியின் ஒப்பனிங் காட்சியை வெளியிட்டுள்ளனர்.இந்த காட்சியை கீழே உள்ள லிங்கில் காணலாம்