தமிழ் சினிமாவில் ஆறிலிருந்து அறுபதுவரை அனைத்து தரப்பினரையும் கவரும் ஆற்றல் பெற்ற நடிகர்கள் சிலர் மட்டுமே.அதில் தளபதி விஜய் மிகமுக்கியமானவர்.டான்ஸ்,காமெடி,ஆக்ஷன் என்று தனது படங்களில் கம்ப்ளீட் என்டர்டைன்மெண்ட் கொடுக்க விஜய் தவறுவதில்லை.

Vijay Requests Fans Not To Celebrate His Birthday

அதற்காகவே இவருக்கு பெண்கள் மற்றும் குழந்தை ரசிகர்கள் ஏராளமாக இருக்கின்றனர்.இவரது படங்கள் ரிலீஸ் ஆனால் குடும்பம் குடும்பமாக படம் பார்க்கவும் மக்கள் தயாராக உள்ளனர்.இவர் நடிப்பில் தயாராகியிருந்த மாஸ்டர் திரைப்படம்கொரோனா காரணமாக தள்ளிப்போயுள்ளது.

Vijay Requests Fans Not To Celebrate His Birthday

இவரது பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதியை விஜய் ரசிகர்கள் எப்போதும் கோலாகலமாக கொண்டாடுவார்கள்.தற்போது இருக்கும் இந்த கொரோனா சூழல் காரணமாக தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்த்து அனைவரும் பத்திரமாக இருக்குமாறு விஜய் தனது ரசிகர் மன்றங்களுக்கு தெரிவித்துள்ளார் என்ற செய்தியை அந்தந்த ரசிகர் மன்றத்தினர் வெளியிட்டுள்ளனர்.விஜயின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.