தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய்.இவரது நடிப்பில் அட்லீ இயக்கத்தில் கடந்த தீபாவளிக்கு வெளியான பிகில் திரைப்படம் வசூல் சாதனை புரிந்து அந்த ஆண்டின் பெரிய லாபம் ஈட்டிய படம் என்ற பெருமையை பெற்றது.இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.

கொரோனா பாதிப்பு குறைந்து திரையரங்குகள் சகஜ நிலைக்கு திருப்பியதும் மாஸ்டர் படத்தினை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.கொரோனா தடுப்பு பணிகளில் விஜய் ரசிகர்கள் தொடக்கத்தில் இருந்து தங்கள் பங்கை சிறப்பாக செய்து வருகின்றனர்.இவரது பிறந்தநாளுக்கும் விஜய் ரசிகர்கள் தங்களால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்திருந்தனர்.

இதனை தொடர்ந்து நண்பர்களுடன் வீடியோகால்,மகேஷ் பாபுவின் சவாலை ஏற்றது என்று ஒரு சில முறை தளபதியின் புகைப்படங்கள் வெளியாகி தாறுமாறாக ட்ரெண்ட் அடித்தன.பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ள இவரை பற்றி என்ன தகவல் வந்தாலும் சமூகவலைத்தளங்களில் செம வைரலாகி விடும்.மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் நெய்வேலியில் நடைபெற்ற போது விஜயை சந்திக்க ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர்.அவர்களை சந்திக்க பஸ் மீது எரிய விஜய் , ரசிகர்களுடன் செல்பியும் எடுத்துக்கொண்டார்.இந்த புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகியது.

பல சாதனைகளை இந்த புகைப்படம் மற்றும் விஜயின் ட்வீட் முறியடித்திருந்தது.தற்போது விஜயின் இந்த செல்பி ட்வீட் இந்தியாவில் அதிகம் ரீட்விட் செய்யப்பட்ட நடிகரின் ட்வீட் என்ற சாதனையை பெற்றுள்ளது.ஷாருக் கானின் ட்வீட் செய்த சாதனையை முறியடித்து இந்த ட்வீட் முதலிடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இதனை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.