தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் மாஸ்டர் படத்தில் நடித்துவருகிறார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Vijay Master Shoot Wrapped Last Day Shoot Pictures

சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.பிப்ரவரி 14 அன்று மாஸ்டர் படத்தின் முதல் பாடலான குட்டிக்கதை பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர்.

Vijay Master Shoot Wrapped Last Day Shoot Pictures

இந்த படத்தின் ஷூட்டிங்கை சில நாட்களுக்கு முன் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் நிறைவு செய்தனர்.தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது என்று ஸ்ரீமன்,பிரேம்குமார் உள்ளிட்டோர் பதிவிட்டுள்ளனர்,உடன் சாந்தனு,கௌரி கிஷான்,லோகேஷ் கனகராஜ்,ஸ்ரீநாத்,ஸ்டண்ட் சில்வா உள்ளிட்டோர் இருந்தனர்