தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய்.இவரது நடிப்பில் அட்லீ இயக்கத்தில் கடந்த தீபாவளிக்கு வெளியான பிகில் திரைப்படம் வசூல் சாதனை புரிந்து அந்த ஆண்டின் பெரிய லாபம் ஈட்டிய படம் என்ற பெருமையை பெற்றது.இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.

கொரோனா பாதிப்பு குறைந்து திரையரங்குகள் சகஜ நிலைக்கு திருப்பியதும் மாஸ்டர் படத்தினை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.கொரோனா தடுப்பு பணிகளில் விஜய் ரசிகர்கள் தொடக்கத்தில் இருந்து தங்கள் பங்கை சிறப்பாக செய்து வருகின்றனர்.கொரோனா பாதிப்பில் பாதிக்கப்பட்ட பலருக்கும் தங்களால் முடிந்த உதவிகளை அவர்கள் செய்து வருகின்றனர்.

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.இதனால் திரையரங்குகளில் வேலைபார்க்கும் பல தொழிலார்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.திரையரங்கில் வேலை பார்த்த பலர் தற்போது வேலை இல்லாமலும்,பலர் தங்கள் குடும்பத்திற்கு உதவமுடியாத சூழலிலும் உள்ளனர்.அவர்களுக்கு உதவும் வகையில் விஜய் ரசிகர்கள் ஒரு செம உதவி செய்துள்ளனர்.

விருத்தாசலத்தில் உள்ள அனைத்து திரையரங்க ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்துக்கும் பயன்படும் வகையில் விருத்தாசலம் தளபதி மக்கள் இயக்கம் சார்பில் ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகை பொருட்கள், காய்கறி, வேஷ்டி சேலை உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளனர்.மேலும் அவர்களுக்கு மதிய விருந்தும் அளித்து விஜய் ரசிகர்கள் அசத்தியுள்ளனர்.இந்த கடினமான சூழ்நிலையில் இவர்களுக்கு உதவ முன் வந்த விருத்தாச்சலம் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.இவர்களது இந்த சேவை தொடரவும்,மேலும் பல நல்ல நலத்திட்டங்களை செயல்படுத்தவும் கலாட்டா சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

vijay makkal iyakkam members help theatre workers during corona crisis

vijay makkal iyakkam members help theatre workers during corona crisis

vijay makkal iyakkam members help theatre workers during corona crisis

vijay makkal iyakkam members help theatre workers during corona crisis

vijay makkal iyakkam members help theatre workers during corona crisis