தமிழ் திரையுலகின் முடிசூடா மண்ணனாகவும், ரசிகர்களின் அண்ணனாகவும் திகழ்பவர் தளபதி விஜய். மக்களுக்கு எந்த வித உதவியாக இருந்தாலும், அதை தக்க நேரத்தில் செய்து கைகொடுப்பவர்கள் தளபதி விஜய்யின் மக்கள் இயக்கத்தில் உள்ளவர்கள். பெயருக்காக செய்யாமல், வீட்டில் உள்ள ஒருவராய் ஓடி-ஆடி களத்தில் நின்று அசத்துவது இவர்களின் சிறப்பு. 

தளபதி விஜய்யின் நிழலாய் இருக்கும் இவர்கள், இதுபோன்ற உதவிகளை செய்வது பிறருக்கு எடுத்துக்காட்டாகவும், துணையாகவும் இருந்து வருகிறது. 

விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் தேவைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களும்... மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு தேவையான முகக் கவசங்கள் கையுறைகள் வழங்கப்பட்டுள்ளன. 

தளபதி விஜய்யின் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் திரு.புஸ்ஸி.N.ஆனந்து அவர்களின் ஆலோசனையின் பேரில், கடலூர் மாவட்ட பொறுப்பாளர் சீனு மற்றும் கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் ராஜசேகர் அவர்களின் தலைமையில், மாவட்ட மாணவரணி தலைவர் அப்பாஸ் ஏற்பாட்டில் இந்த நற்செயல் நடந்துள்ளது. 

இந்நிகழ்ச்சியில் கடலூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜ்குமார் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ் தென்மேற்கு விவாசய அணி தலைவர் பாலகணபதி விருத்தாசலம் நகர தலைவர் வாசு மாவட்ட நிர்வாகி சக்திவேல் மங்களூர் ஒன்றியம் நீலகண்டன் மற்றும் மாவட்ட நகர ஒன்றிய மாணவரணி நிர்வாகிகள் தளபதியின் மக்கள் இயக்க சொந்தங்கள் பலர் கலந்து கொண்டனர்.

கொரோனா இரண்டாம் அலையின் கொடூரத்திலும் மக்களுக்கு தக்க உதவிகளை செய்து வரும் இவர்களை பாராட்டுவதில் பெருமை கொள்கிறது நம் கலாட்டா.