தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் விஜய் தேவரகொண்டாவிற்கென தனி மவுசு உண்டு. நோட்டா, டியர் காம்ரேட் போன்ற வெற்றி படங்களால் தென்னிந்திய திரையுலகின் சென்சேஷனாக திகழ்கிறார். தற்போது ஃபைட்டர் என்கிற படத்தில் நடித்து வருகிறார். 

VijayDevarakonda

கொரோனா காரணமாக வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ள திரை பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் விஜய் தேவரகொண்டா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு விழிப்புணர்வு பதிவை வெளியிட்டுள்ளார். 

vijaydevarakonda

அதில், அனைவரும் பாதுகாப்பாக இருப்பீர்கள் என நம்புகிறேன். வெறும் துணியால் கூட இந்த நோய் பரவுதலை தடுக்க முடியும். அதனால் மெடிக்கல் மாஸ்குகளை டாக்டர்களுக்கு விட்டுவிடுங்கள். அதற்கு பதிலாக கர்ச்சிப், ஸ்கார்ஃப் உள்ளிட்டவற்றை பயன்படுத்துங்கள் என அக்கறையுடன் தெரிவித்துள்ளார்.