விஜய் தேவர்கொண்டாவின் லிகர் டீஸர் படைத்த அசத்தல் சாதனை !
By Aravind Selvam | Galatta | January 04, 2022 13:43 PM IST
தென்னிந்திய சினிமாவின் சென்சேஷனல் நடிகராக மாறியுள்ளவர் விஜய் தேவர்கொண்டா.அர்ஜுன் ரெட்டி என்ற படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான ஒரு நடிகராக மாறினார்,குறிப்பாக பெண்களின் மனம் கவர்ந்த கனவு கண்ணனாக மாறினார் விஜய் தேவர்கொண்டா.பெண்கள் மட்டுமின்றி பல இளைஞர்களின் மனதிலும் மாஸ் ஹீரோவாக உருவெடுத்தார் விஜய் தேவர்கொண்டா.
இதனை தொடர்ந்து இவர் நடித்த கீதா கோவிந்தம்,டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களும் தென்னிந்திய அளவில் பெரிய ஹிட் அடித்தது..விஜய் தேவர்கொண்டா நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் வேர்ல்ட் பேமஸ் லவ்வர்.இந்த படம் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.
இதனை தொடர்ந்து இவர் பிரபல இயக்குனர் பூரி ஜெகன்னாத் இயக்கும் படத்தில் நடித்துவருகிறார்.இந்த படத்தினை பூரி ஜெகன்நாத்,சார்மீ,கரண் ஜோகர் உள்ளிட்டோர் தயாரிக்கின்றனர்.இந்த படத்தில் அனன்யா பாண்டே,ரம்யா கிருஷ்ணன்,ரோனித் ராய்,குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
Liger என்று பெயரிடப்பட்டுள்ள பிரம்மாண்டமாக பன்மொழிகளில் ஆகஸ்ட் 25 2022-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த கிளிம்ப்ஸ் வீடியோ 4 நாட்களில் 25 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
#LigerFirstGlimpse BOMBARDING in Social Media with
— Done Channel (@DoneChannel1) January 4, 2022
25M+ Digital Views
550K+ Likes &
Trending on Youtube from Past 4Dayshttps://t.co/V1ifarHews#VaatLagaDenge @TheDeverakonda @MikeTyson #PuriJagannadh @karanjohar @charmmeofficial @apoorvamehta18 @DharmaMovies @PuriConnects pic.twitter.com/GbDwgfzlnB
WATCH the action packed TEASER of Vijay Deverakonda's Liger - Don't miss!
31/12/2021 10:22 AM
Vijay Deverakonda's Liger first BTS action - Here's the new special glimpse!
30/12/2021 02:08 PM
Three big updates on Vijay Deverakonda's highly anticipated next, Liger!
28/12/2021 05:44 PM
Two big announcements on Vijay Deverakonda's Liger - New Release Date Revealed!
16/12/2021 12:24 PM