இந்திய அளவில் பல இளம் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாக வலம் வரும் நடிகர் விஜய் தேவரகொண்டா, அடுத்ததாக தெலுங்கு திரை உலகின் நட்சத்திர இயக்குனரான இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக தயாராக உள்ள JGM ஜனகணமன திரைப்படத்தில் நடிக்கிறார். தொடர்ந்து விஜய் தேவரகொண்டா-சமந்தா இணைந்து நடிக்கும் குஷி திரைப்படமும் தயாராகி வருகிறது.

முன்னதாக முதல் முறை இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவர்கொண்டா நடித்த அதிரடி ஆக்சன் திரைப்படமான லைகர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 25-ஆம் தேதி தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீஸாகவுள்ளது. குத்து சண்டை வீரராக விஜய் தேவரகொண்டா நடித்துள்ள லைகர் படத்தில், கதாநாயகியாக பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே நடித்துள்ளார். 

மேலும் ரம்யா கிருஷ்ணன், ரோனிட் ராய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, லைகர் திரைப்படத்தின் மிரட்டலான முக்கிய கதாபாத்திரத்தில் உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை சாம்பியனான மைக் டைசன் நடித்துள்ளார். விஷ்ணு சர்மா ஒளிப்பதிவில்  லைகர் திரைப்படத்தின் பாடல்களுக்கு தனிஷ்க் பக்ச்சி இசையமைக்க பிரபல இசையமைப்பாளர் மணிஷர்மா பின்னணி இசை சேர்க்கிறார்.

லைகர் திரைப்படத்தை நடிகை சார்மி மற்றும் பூரி ஜெகநாத் அவர்களின் பூரி கனெக்ட்ஸ் மற்றும் தர்மா புரோடக்சன்ஸ் இணைந்து தயாரிக்க,யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் வழங்குகிறது. இந்நிலையில் லைகர் திரைப்படத்திலிருந்து வாட் லகா தேங்கே எனும் பாடல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அசத்தலான அந்த பாடல் வீடியோ இதோ…