விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகி கடந்த தீபாவளிக்கு வெளியான திரைப்படம் பிகில்.ஏ.ஜி.எஸ் என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தனர்.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.

Vijay Bigil To Re Release In France and Germany

பெண்கள் கால்பந்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் கதிர்,நயன்தாரா,விவேக்,யோகி பாபு,இந்துஜா,அமிர்தா ஐயர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Vijay Bigil To Re Release In France and Germany

கடந்த வருடத்தில் வசூல் சாதனை செய்தபடமாக இந்த படம் அமைந்தது.கொரோனா காரணமாக உலகம் முழுவதும் திரையரங்குகள்,ஷூட்டிங்குகள் என்று சில மாதங்களாக எதுவும் நடைபெறாமல் உள்ளது.உலகில் சில இடங்களில் கொரோனாவின் பாதிப்பு குறைந்து சகஜ நிலை திரும்பி வருவதால் திரையரங்குகள் திறக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் பிரான்ஸ்,ஜெர்மனி போன்ற இடங்களில் விஜயின் பிகில் படத்துடன் மீண்டும் தியேட்டர் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.ஜூன் 22 விஜயின் பிறந்தநாள் வருவதால் திரையரங்குகள் விஜய் படத்துடன் தொடங்கும் எண்ணத்தில் உள்ளனர் என்று தெரிகிறது.