தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக ரசிகர்களுக்கு பல ஃபேவரட் பாடல்களை கொடுத்த விஜய் ஆண்டனி தற்போது நடிகர், தயாரிப்பாளர், படத்தொகுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக வலம் வருகிறார். அடுத்ததாக முன்னணி ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய்மில்டன் இயக்கத்தில் மழை பிடிக்காத மனிதன் படத்தில் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார் .

முன்னதாக மூடர் கூடம் பட இயக்குனர் நவீன் இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி இணைந்து நடித்துள்ள அக்னி சிறகுகள்  மற்றும் இயக்குனர் A.செந்தில்குமார் இயக்கத்தில் காக்கி ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. மேலும் பிச்சைக்காரன் 2 படத்தை தயாரித்து இயக்கி நடிக்கும் விஜய் ஆன்டனியின் நடிப்பில், அடுத்து கொலை என்னும் க்ரைம் த்ரில்லர் படமும்,தமிழ்ப்படம் பட இயக்குனர் C.S.அமுதன் இயக்கத்தில் புதிய படமும் தயாராகி வருகிறது. 

இந்த வரிசையில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்து விரைவில் ரிலீசாக உள்ள திரைப்படம் தமிழரசன். இயக்குனர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் அதிரடி ஆக்சன் திரைப்படம் தயாராகியுள்ள தமிழரசன் திரைப்படத்தில் நம்பீசன் கதாநாயகியாக நடிக்க, சோனு சூட்,யோகி பாபு,கஸ்தூரி மற்றும் சுரேஷ்கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள தமிழரசன் படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் தமிழரசன் திரைப்படம் தற்போது சென்சார் செய்யப்பட்டுள்ளது. தமிழரசன் திரைப்படத்திற்கு சென்சாரில் U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் டிசம்பரில் தமிழரசன் திரைப்படம் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.