தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனி தற்போது கதாநாயகனாகவும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக ஆக்சன் கிங் அர்ஜுன் உடன் இணைந்து இவர் நடித்த கொலைகாரன் திரைப்படம் கிரைம் த்ரில்லர் திரைப்படமாக வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

அடுத்ததாக விஜய் ஆண்டனி நடித்துள்ள கோடியில் ஒருவன் திரைப்படம் விரைவில் திரைக்கு வர தயாராகி வருகிறது. இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணா இயக்கும் இத்திரைப்படத்தில் பிரபல இசையமைப்பாளர் நிவாஸ்.K.பிரசன்னா இசையமைத்துள்ளார். மீசையமுறுக்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகை ஆத்மிகா, விஜய் ஆண்டனி உடன் இணைந்து கோடியில் ஒருவன் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக கோடியில் ஒருவன் திரைப்படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் கோடியில் ஒருவன் படத்திலிருந்து புதிய பாடல் ஒன்று இன்று வெளியானது.தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் கௌதம் வாசுதேவ் மேனன் தற்போது பாடகராக அவதாரம் எடுத்துள்ளார்.  

இசையமைப்பாளர் நிவாஸ்.K.பிரசன்னா இசையமைத்துள்ள ஸ்லம் ஆன்த்தம் பாடலை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் பாடியுள்ளார்.  கௌதம் வாசுதேவ் மேனனுடன் விஜய் ஆண்டனி,பிரேம்ஜி அமரன் மற்றும் நிவாஸ்.K.பிரசன்னா  இணைந்து பாடியிருக்கும் ஸ்லம் ஆன்த்தம் பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.இந்த பாடல் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.