இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் கோடியில் ஒருவன். விஜய் ஆண்டனி ஜோடியாக ஆத்மீகா நடித்துள்ளார். இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் வழங்க தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு உதய குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்திற்கு விஜய் ஆண்டனியே எடிட்டிங் செய்வதாக சமீபத்தில் தகவல் வெளியானது. எடிட்டராக களமிறங்கிய விஜய் ஆண்டனியை பலரும் பாராட்டினர். 

இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தில் டியூஷன் மாஸ்டராக நடித்துள்ளார் விஜய் ஆண்டனி. ஆக்ஷன் அதிரடி நிறைந்த இந்த படத்தில் கே.ஜி.எஃப் பட புகழ் கருடா ராமசந்திர ராஜு முக்கிய ரோலில் நடித்துள்ளார். 

படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து இறுதி கட்ட பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர் படக்குழுவினர். இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது. வரும் மே மாதம் 14-ம் தேதி இப்படம் வெளியாகவிருக்கிறது. 

தமிழ் படம் புகழ் இயக்குனர் சி.எஸ். அமுதன் இயக்கத்தில் புதிய திரில்லர் படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய் ஆண்டனி. இன்ஃபிநிட்டி ஃபிலிம் மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர். நேற்று இதன் அறிவிப்பு வெளியானது. 

விஜய் ஆண்டனி கைவசம் பிச்சைக்காரன் 2 படம் உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு வெளியாகி ஹிட்டான பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறார்கள். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவிருக்கும் இந்த படத்தை ப்ரியா கிருஷ்ணசாமி இயக்குவதாக இருந்தது. பின் கோடியில் ஒருவன் இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணாவே இந்த படத்தை இயக்கவுள்ளார் என்று சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.