தமிழ் சினிமாவின் ஃபேவரட் இசையமைப்பாளர்களில் ஒருவரான விஜய் ஆண்டனி தொடர்ந்து நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட கலைஞராக ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அந்த வகையில் முன்னதாக விஜய் ஆண்டனி நடிப்பில் தயாராகி இருக்கும் தமிழரசன், அக்னி சிறகுகள் மற்றும் காக்கி ஆகிய திரைப்படங்கள் நிறைவடைந்து ரிலீஸுக்காக காத்திருக்கின்றன.

தொடர்ந்து இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். மேலும் கொலை மழை பிடிக்காத மனிதன் வள்ளி மயில் உள்ளிட்ட திரைப்படங்கள் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவர தயாராகி வருகின்றன. இந்த வரிசையில் இயக்குனர் C.S.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் ரத்தம். 

இன்ஃபினிட்டி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் விஜய் ஆண்டனியுடன்இணைந்து ரம்யா நம்பீசன், மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, நிழல்கள் ரவி மற்றும் ஸ்டாண்ட் அப் காமெடியன் ஜெகன் கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் ரத்தம் படத்திற்கு கண்ணன் நாராயணன் இசையமைக்கிறார்.

பொலிட்டிகல் க்ரைம் திரில்லர் படமாக உருவாகி வரும் ரத்தம் திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரத்தம் திரைப்படத்தின் டீசருக்காக இயக்குனர்கள் வெற்றிமாறன், வெங்கட் பிரபு, பா.ரஞ்சித் ஆகியோர் சிறப்பு கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இயக்குனர்கள் மூவரும் தோன்றும் அதிரடியான ரத்தம் படத்தின் டீசர் தற்போது வெளியானது. அந்த டீசர் இதோ…