தமிழ் திரையுலகில் தனக்கே உரித்தான பாணியில் பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிகராகவும் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் தயாரிப்பாளர், படத்தொகுப்பாளர், & இயக்குனர் என பன்முகத் தன்மை கொண்ட கலைஞராக வலம் வருகிறார்

முன்னதாக மூடர்கூடம் படத்தை இயக்கிய இயக்குனர் நவீன் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி இணைந்து நடித்துள்ள அக்னிச்சிறகுகள், இயக்குனர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் தமிழரசன் மற்றும் இயக்குனர் A.செந்தில்குமார் இயக்கத்தில் காக்கி உள்ளிட்ட விஜய் ஆண்டனியின் திரைப்படங்கள் அடுத்தடுத்து தயாராகிவருகின்றன.

அடுத்ததாக விஜய் ஆன்டணி நடிப்பில் செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் T.D.ராஜா தயாரிப்பில், இன்ஃபினிட்டி ஃபிலிம் வெனட்சர்ஸ் வழங்கும் கோடியில் ஒருவன் திரைப்படம் வருகிற செப்டம்பர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ள கோடியில் ஒருவன் திரைப்படத்தில் நடிகர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ஆத்மிகா கதாநாயகியாக நடித்துள்ளார். 

இசையமைப்பாளர் நிவாஸ்.K.பிரசன்னா இசையில் N.S.உதயகுமார் ஒளிப்பதிவு செய்ய இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி படத்தொகுப்பு செய்துள்ளார் . இந்நிலையில் கோடியில் ஒருவன் திரைப்படத்திலிருந்து நீ காணும் கனவே என்னும் புதிய பாடல் இன்று வெளியானது. அழகான அந்த பாடல் வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணுங்கள்.