லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து உருவாகி வரும் படம் மாஸ்டர். படத்தின் மூன்று போஸ்டர்கள் வெளியாகி பட்டையை கிளப்பியது. ஏப்ரல் மாதம் வெளியாகும் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. படத்தின் விநியோக உரிமையை செவென் ஸ்க்ரீன் ஸ்டுடியோ கைப்பற்றியுள்ளதாக அறிவிப்பு வெளியானது.

master

படத்தின் முதல் சிங்கிளான ஒரு குட்டி கதை பாடல் வெளியாகி ட்ரெண்டானது. அருண் ராஜா எழுதிய இப்பாடல் வரிகளுக்கு விஜய் குரல் தந்துள்ளார். இப்படத்தில், மாளவிகா மோகனன், ஸ்ரீமன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீநாத், நாகேந்திர பிரசாத், ரமேஷ் திலக் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். 129 நாட்கள் கொண்ட ஷூட்டிங் சமீபத்தில் முடிந்தது. 

master

master lokeshkanagaraj

படப்பிடிப்பை முடித்தபின் தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் நெய்வேலியில் கடைசி நாள் ஷூட்டிங்கின் போது மரக்கன்றுகளை படப்பிடிப்பு தளத்தில் நட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் சக்கை போடு போட்டு வருகிறது.