போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இயக்குனர் அல்லாது பாடலாசிரியர், நடிகர் என பன்முக திறமையுள்ளவர். இவரது இயக்கத்தில் வெளிவந்த நானும் ரௌடி தான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கிறார். 

VigneshShivn

இதன் பிறகு விஜய்சேதுபதி வைத்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கவுள்ளார். இதில் நயன்தாரா மற்றும் சமந்தா முக்கிய ரோலில் நடிக்கவுள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் படத்தை தயாரிக்கவுள்ளார் விக்னேஷ் சிவன். 

VigneshShivn

இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவுடன் இருக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், பாண்டிச்சேரியில் நானும் ரௌடி தான் படப்பிடிப்பின் போது நயன்தாராவிற்கு காட்சியை விளக்குகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.