போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இயக்குனர் அல்லாது பாடலாசிரியர், நடிகர் என பன்முக திறமையுள்ளவர். இவரது இயக்கத்தில் வெளிவந்த நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கிறார். 

vigneshshivn

நானும் ரவுடி தான் படத்தின் போது நடிகை நயன்தாராவுக்கும் இவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். தனது காதல் குறித்து நயன்தாராவுடன் உள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார் விக்னேஷ் சிவன். 

vigneshshivn vigneshshivn

நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. விஜய்சேதுபதி நாயகனாக நடிக்க நயன்தாரா மற்றும் சமந்தா நாயகிகளாக நடிக்கவுள்ளனர்.