போடா போடி திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இயக்குனர் அல்லாது பாடலாசிரியர், நடிகர் என பன்முக திறமையுள்ளவர். இவரது இயக்கத்தில் வெளிவந்த நானும் ரௌடி தான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கிறார். சமீபத்தில் மாஸ்டர் படத்தில் பாடல் வரிகள் எழுதி அசத்தியுள்ளார். 

Vignesh Shivans Mothers Day Wishes For Nayanthara

நேற்று அன்னையர் தினத்தையொட்டி, நடிகை நயன்தாரா ஒரு குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் விக்னேஷ் சிவன். அதில், கையில் இருக்கும் குழந்தையின் தாய்க்கும், எனது வருங்கால குழந்தையின் தாய்க்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள் என குறிப்பிட்டிருந்தார். விக்னேஷ் சிவனின் இந்த பதிவுக்கு லைக்குகள் குவிகிறது.

Vignesh Shivans Mothers Day Wishes For Nayanthara

லாக்டவுன் முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன் விஜய்சேதுபதி வைத்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கவுள்ளார். இதில் நயன்தாரா மற்றும் சமந்தா முக்கிய ரோலில் நடிக்கவுள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் படத்தை தயாரிக்கவுள்ளார் விக்னேஷ் சிவன்.