SIGN பண்ணப்போ 22வயசு.. ஆனா ரிலீஸாகும் போது 27வயசு!- போடா போடி பட மறக்க முடியாத நினைவுகள் பகிர்ந்த விக்னேஷ் சிவன்! வைரல் வீடியோ

போடா போடி பட மறக்க முடியாத நினைவுகள் பகிர்ந்த விக்னேஷ் சிவன்,vignesh shivan shared struggles of poda podi movie | Galatta

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். தொடர்ச்சியாக ரசிகர்கள் விரும்பும் ஃபீல் குட் திரைப்படங்களை கொடுத்து வரும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது அடுத்த படத்தில் அஜித் குமார் உடன் இணைவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் சமீபத்தில் திரைப்படம் கைவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. எனவே இயக்குனர் விக்னேஷ் சிவனின் அடுத்த திரைப்படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்த நிலையில் நமது கலாட்டா தமிழில் நடிகையும் இயக்குனருமான சுஹாசினி மணிரத்னம் அவர்களோடு கேம் சேஞ்ச் வித் சுஹாசினி மணிரத்னம் சிறப்பு நேர்காணலில் கலந்து கொண்ட இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது திரைப்பயண அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

அந்த வகையில் தனது முதல் திரைப்படமான போடா போடி திரைப்படத்தின் மறக்க முடியாத பல சுவாரஸ்யமான நினைவுகளை நம்மோடு விக்னேஷ் சிவன் பகிர்ந்து கொண்டார். அப்படிப் பேசுகையில், “முதல் படம் போடா போடி கையெழுத்திடும் போது எனக்கு வயது 22... கல்லூரி படிப்பை முடித்த சமயத்திலேயே போடா போடி படத்திற்கு கையெழுத்திட்டு விட்டேன். அதன் பிறகு நிறைய நேரம் எடுத்தது." என தெரிவித்த இயக்குனர் விக்னேஷ் சிவனிடம், “22 வயதில் நீங்கள் இயக்கிய போடா போடி திரைப்படத்தில் என்னென்ன போராட்டங்கள் இருந்தது ஒருபுறம் பார்த்தால் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி, முதல் படமே லண்டனில் படப்பிடிப்பு, சிலம்பரசன்.TR மாதிரி ஒரு ஹீரோ, வரலட்சுமி சரத்குமார் மாதிரி ஒரு ஹீரோயின், ஷோபனா நடிக்கிறார். என ஒருபுறம் மிகவும் அதிர்ஷ்டசாலி என்பது போல் தோன்றுகிறது மறுபுறம் இதற்கு பின்னால் நிறைய போராட்டங்கள் இருந்திருக்கும் எனவும் தோன்றுகிறது. தயாராகி வெளிவர நீண்ட காலம் எடுத்துக் கொண்டது... இந்த அதிர்ஷ்டம் மற்றும் போராட்டம் இது குறித்து பேசுங்கள்…” எனக் கேட்டபோது, "அதிர்ஷ்டம் தான் 22 வயதில் அந்த படத்திற்கு கையெழுத்துடன் ஆனால் அந்த படம் படப்பிடிப்பிற்கு செல்வதற்கு இரண்டு ஆண்டுகள் ஆனது. 2007ல் கையெழுத்திட்டு விட்டேன் 2010ல் தான் படப்பிடிப்பிற்கு சென்றோம். அப்போதுதான் போக முடிந்தது, ஏனென்றால் அந்த தருணத்தில் தான் சிலம்பரசன்.TR அவர்களுக்கு தொடர்ச்சியாக விண்ணைத்தாண்டி வருவாயா, வானம், வாலு உள்ளிட்ட பல படங்கள் இருந்தன. அதன் பிறகு தான் இந்த படம் நடந்தது. எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. என் வாழ்க்கையின் முதல் ஷாட் இயக்குனராக நான் முதல் முறை ஆக்சன் சொன்னது, லண்டன் டவர் பாலத்தின் கீழே நடிகர் நடிகைகள் இருக்கிறார்கள் ஒரு பிரிட்டிஷ் ஒளிப்பதிவாளர், என வைத்து பயங்கரமாக எடுத்தோம். அந்த இடத்திற்கு பெயர் பட்லர்ஸ் வார்ஃப் அந்த இடத்தில் போய் தேங்காய் உடைத்தோம். அங்கு இருப்பவர்களிடலாம் சொல்லிவிட்டு தான் உடைத்தோம். இது எங்களுடைய ஒரு சடங்கு என்ன சொல்லிவிட்டு தான் உடைத்தோம்.” என தெரிவித்த இயக்குனர் விக்னேஷ் சிவன் தொடர்ந்து போடா போடி திரைப்படத்திற்கான சரியான அங்கீகாரம் கிடைத்ததா? என்பது குறித்தும் மனம் திறந்து பேசினார். அப்படி பேசுகையில், “2010ல் படப்பிடிப்பு நடத்தினோம் ஆனால் 2012 இறுதியில் தான் படம் ரிலீஸ் ஆனது. அதுவும் ரிலீஸ் ஆகும் போது தளபதி விஜய் அவர்களின் துப்பாக்கி திரைப்படத்தோடு வெளியானது. தீபாவளி வெளியீடாக ரிலீஸ் ஆனது. துப்பாக்கி திரைப்படத்தோடு வெளிவந்த போடா போடி திரைப்படம் முற்றிலும் மாறுபட்ட ஜானரில் இருந்தது. தீபாவளிக்கு குடும்பத்தோடு கும்பலாக சென்று பார்க்கக்கூடிய ஒரு கொண்டாட்டமான படம் கிடையாது. ரொமான்டிக் காமெடியில் அந்தத் திரைக்கதையே ஒரு ஃப்ளோவில் செல்லக்கூடியதாக தான் இருக்கும். அதை ஒரு சோதனையாக தான் முயற்சித்தோம் இப்போது வரை நான் அது மாதிரி பல சோதனைகளை மேற்கொள்கிறேன். எனவே அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதற்காக நான் வருத்தப்படவில்லை. வருத்தப்பட வேண்டும் என்றால் வருத்தப்படுவதற்கு 10 ஆயிரம் விஷயங்கள் இருக்கிறது சந்தோஷப்பட வேண்டுமென்றால் அதற்கும் 10 ஆயிரம் விஷயங்கள் இருக்கிறது நான் சந்தோஷப்படுவதையே தேர்ந்தெடுக்கிறேன். எனவே இது பற்றி அதிகம் யோசித்து நமக்கு எந்த பயனும் இல்லை. நமக்கு இன்று ஒரு விஷயம் சரியாக அமையவில்லை என்றால் நாளை ஒரு விஷயம் சரியாக அமையும் அதைத்தான் நான் நம்புகிறேன்." என விக்னேஷ் அவன் தெரிவித்துள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவனின் அந்த சிறப்பு பேட்டி இதோ…
 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிதாமகன் தயாரிப்பாளருக்கு ராகவா லாரன்ஸ் செய்த பேருதவி! விவரம் உள்ளே
சினிமா

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிதாமகன் தயாரிப்பாளருக்கு ராகவா லாரன்ஸ் செய்த பேருதவி! விவரம் உள்ளே

ராகவா லாரன்ஸின் செம்ம மாஸ் டான்ஸ்… அதிரடியான ருத்ரன் பட துள்ளளான ஜொர்த்தால பாடல் இதோ!
சினிமா

ராகவா லாரன்ஸின் செம்ம மாஸ் டான்ஸ்… அதிரடியான ருத்ரன் பட துள்ளளான ஜொர்த்தால பாடல் இதோ!

'விஜய் சேதுபதி நானும் ரவுடி தான் படத்தை ஏற்றுக்கொண்டது இப்படி தான்!'- உண்மையை உடைத்த விக்னேஷ் சிவனின் கலக்கலான நேர்காணல் இதோ!
சினிமா

'விஜய் சேதுபதி நானும் ரவுடி தான் படத்தை ஏற்றுக்கொண்டது இப்படி தான்!'- உண்மையை உடைத்த விக்னேஷ் சிவனின் கலக்கலான நேர்காணல் இதோ!