தளபதி விஜய்க்கு பாடல் எழுதிய அனுபவம் குறித்து விக்னேஷ் சிவன் பதிவு !
By Sakthi Priyan | Galatta | March 16, 2020 12:07 PM IST

XB நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். ஏப்ரல் மாதம் 9-ம் தேதி வெளியாகும் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. மாளவிகா மோகனன், ஸ்ரீமன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீநாத், நாகேந்திர பிரசாத், ரமேஷ் திலக் ஆகியோர் நடித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
நேற்று மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிக சிறப்பாக நடைபெற்றது. வழக்கம் போல தளபதியின் மேடை பேச்சு அரங்கத்தை அதிர வைத்தது. பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் விஜய் சேதுபதியும் பேசி விழாவிற்கு கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தினார்.
மாஸ்டர் திரைப்படத்தில் மொத்தம் 12 பாடல்கள் இடம்பெற்றுள்ளது. அதில் இரண்டு பாடல்கள் எழுதியுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன். முதல் முறையாக தளபதி விஜய்க்கு பாடல் எழுதிய அனுபவம் குறித்து பதிவு செய்துள்ளார். உலகம் முழுதும் இருக்கும் தளபதி ரசிகர்களுக்கு இவ்வரிகள் சமர்ப்பணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
Sun TV releases 1st celeb speech from Master audio launch
16/03/2020 12:00 PM
Full Video: Ole Ole 2.0 - Jawaani Jaaneman | Saif Ali Khan, Tabu, Alaya
16/03/2020 10:40 AM