தமிழ் திரையுலகில் எதார்த்த படைப்புகளின் மூலம் இளைஞர்களை கவர்ந்தவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். இயக்குனர் அல்லாது பாடலாசிரியர், நடிகர் என பன்முக திறமையுள்ளவர். இவரது இயக்கத்தில் வெளிவந்த நானும் ரௌடி தான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கிறார். இதன் பிறகு விஜய்சேதுபதி வைத்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கவுள்ளார். நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் படத்தை தயாரிக்கவுள்ளார் விக்னேஷ் சிவன். 

Vignesh Shivan Posts New Cute Video With Nayanthara

நயன்தாராவுக்கு கொரோனா என்று வதந்தியை பரப்பியவர்களுக்கு பதிலடி தரும் வகையில் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார் விக்னேஷ் சிவன். அதில் ஃபேஸ் ஆப் மூலம் நயன்தாராவும் விக்னேஷும் சிறுவன் சிறுமியாக காட்சியளிக்கின்றனர். சிறிய வயதுள்ள க்யூட்டான நயன்தாராவும், சிறுவன் விக்னேஷும் ஆங்கிலப் பாடல் ஒன்றுக்கு க்யூட்டான முகபாவங்களை செய்துள்ளனர். வதந்தி பரப்பியவர்களுக்கு பதிலடி தரும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது என பதிவு செய்து வருகின்றனர் ரசிகர்கள். 

Vignesh Shivan Posts New Cute Video With Nayanthara

மேலும் அவரது பதிவில், நாங்கள் உயிரோடுதான் இருக்கிறோம். மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கிறோம். உங்களைப் போன்ற ஜோக்கர்களின் கற்பனை மற்றும் முட்டாள் தனமான ஜோக்குகளை பார்க்க கடவுள் எங்களுக்கு போதுமான வலிமை மற்றும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறார் என விக்னேஷ் சிவன் குறிப்பிட்டுள்ளார்.