இந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு குறித்து நடிகர் நடிகையர்கள் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். நேற்று மாலை 5 மணிக்கு மருத்துவர்கள், தூய்மை பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர். 

vigneshshivan

வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருக்கும் திரை பிரபலங்களுக்கு சமூக ஊடகங்கள் கைகொடுக்கிறது. இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் டிக்டாக் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை அவர்களது ரசிகர்கள் பகிர்ந்தது மட்டுமல்லாமல் இருவருக்கும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர். 

Vigneshshivan

இறுதியாக விக்னேஷ் சிவன் மாஸ்டர் படத்தில் இரண்டு பாடல்களை எழுதினார். அதன் பின் விஜய் சேதுபதி வைத்து காத்துவாக்குல ரெண்டு காதல் எனும் படத்தை துவங்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க நயன்தாரா மற்றும் சமந்தா நாயகிகளாக நடிக்கின்றனர். லலித் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார்.