நடிகர் சிலம்பரசன்.TR கதாநாயகனாக நடித்த போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் விக்னேஷ் சிவன் அடுத்ததாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா இருவரையும் வைத்து இயக்கி வெளிவந்த நானும் ரவுடிதான் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

தொடர்ந்து தனக்கே உரித்தான தனி ஸ்டைலில் அழகான திரைப்படங்களை வழங்கிவரும் இயக்குனர் விக்னேஷ் சிவன் நடிகர் சூர்யாவுடன் இணைந்த தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்திற்குப் பிறகு நெட்ஃபிளிக்ஸில் வெளிவந்த பாவக் கதைகள் ஆந்தாலஜி வெப் சீரிஸில் லவ் பண்ணா உட்ரனும் எபிசோடை இயக்கினார்.

தனது திரைப்பயணத்தில் முதல்முறை அஜீத் குமாருடன் கைகோர்க்கும் விக்னேஷ் சிவன் இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் நடிக்கும் #AK61 படத்தைத் தொடர்ந்து அஜித்குமார் நடிக்கும் #AK62 படத்தை இயக்க உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதனிடையே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆன காத்து வாக்குல ரெண்டு காதல் படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி-நயன்தாரா-சமந்தா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் திருப்பதி ஏழுமலையானை தரிசித்துள்ளனர். இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை நயன்தாராவுடன் திருப்பதியில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். வைரலாகும் அந்த பதிவு இதோ…