உடல் எடையை குறைத்து உற்சாக பதிவு செய்த வித்யூ ராமன் !
By Sakthi Priyan | Galatta | June 23, 2020 16:18 PM IST
கடந்த 2012-ம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கிய நீதானே என் பொன்வசந்தம் படத்தில் சமந்தாவின் தோழியாக நடித்தவர் வித்யூ ராமன். இவர் பிரபல குணச்சித்திர நடிகர் மோகன் ராமனின் மகள் ஆவார். நடிக்க துவங்கிய காலத்திலிருந்தே இவர் குண்டாக இருப்பதை குறிப்பிட்டு பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
படங்களிலும் அதிக அளவில் காமெடி வேடங்களிலேயே நடித்ததால் இவரது உடல் தோற்றத்தை விமர்சித்து பாடி ஷேமிங் செய்யும் வகையிலும் சில படங்களில் வசனங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. சமீப வருடங்களாக வித்யூ ராமன் தெலுங்கு சினிமாவில் அதிக அளவில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் பல பிரலங்கள் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஊக்கமளித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை வித்யூ ராமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புதிய உடல் தோற்றம் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், நான் அதிக எடையில் இருக்கும் போது எல்லோருமே உங்கள் தன்னம்பிக்கை எப்படி இருக்கிறது என்று கேட்பர். ஆனால் நான் இன்று உண்மையில் தன்னம்பிக்கையுடன் இருக்கிறேன். என் வாழ்க்கை முறையையும் பொழுதுபோக்குகளையும் மாற்றினேன்.
நீங்கள் மனதார ஒன்றை நினைத்தால் நிச்சயம் அது சாத்தியமாகும் என்பது புரிந்தது. வாரத்தில் 6 முறை உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாட்டை கடைபிடித்தல் என செய்துவந்தேன். வாழ்க்கையில் எதுவும் இலகுவாக கிடைக்காது. வேர்வையாலும் அழுகையாலும் சாத்தியமாகும். இப்போது எனது எடை 68 கிலோ என்று பதிவு செய்துள்ளார். வித்யூ ராமனின் இந்த பதிவு ரசிகர்களை ஈர்த்து வருகிறது.
Radha - Half Of Krishna Teaser | Rana Daggubati | Siddhu | Shalini
23/06/2020 05:18 PM
Master heroine Malavika Mohanan's next film is with this recent young sensation!
23/06/2020 04:32 PM
After Kutti Story, one more viral song ready - Master talent's latest statement!
23/06/2020 04:21 PM
This highly acclaimed director announces his next film - Bold Poster Here!
23/06/2020 03:32 PM