சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் படம் பேட்ட. ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, நவாஷுதின் சித்திக், த்ரிஷா, சிம்ரன், பாபி சிம்ஹா, சசிகுமார் போன்ற நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கின்றனர்.

படத்தின் ஒட்டுமொத்த பாடல்கள் 9-ம் தேதி வெளியாகி இணையதள வாசிகள் அனைவரையும் ஈர்த்து வருகிறது. இப்படத்தின் டீஸர் டிசம்பர் 12-ம் தேதியான சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாளன்று வெளியானது. சமீபத்தில் பேட்ட ட்ரைலர் வெளியாகி அசத்தி வருகிறது.

தற்போது இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், நடிகர் பாபி சிம்ஹா பேசிய வீடியோ பதிவை வெளியிட்டது. நிச்சயம் படம் வேற லெவலில் இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் வாய்ப்பு குடுத்த இயக்குனர் கார்த்திக் சுப்பராஜுக்கு தனது நன்றியை பதிவு செய்தார்.